செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 4 ஜனவரி 2022 (11:56 IST)

மொத்தமாக அனைத்து சேவைகளும் நிறுத்தம்..! – டாட்டா காட்டிய ப்ளாக்பெர்ரி!

பிரபல செல்போன் இயங்குதளமான ப்ளாக்பெர்ரி தனது சேவைகளை முழுவதுமாக நிறுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளது.

செல்போன் இயங்குதளங்களில் ஆண்ட்ராய்டு, ஆப்பிள் ஐஓஎஸ் போல பிரபலமாக இருந்த இயங்குதளம் ப்ளாக்பெர்ரி. 2012 முதலாக பிரபலமாக இருந்த இந்த இயங்குதளம் கொண்ட ப்ளாக்பெர்ரி செல்போன்களையும் பலர் விரும்பி வாங்கி உபயோகித்து வந்தனர். ஆனால் ஆண்ட்ராய்டு, ஆப்பிள் ஐஓஎஸ் வளர்ச்சிக்கு ஈடு கொடுக்க முடியாததால் ப்ளாக்பெர்ரி பின்னடைவை சந்தித்தது. இதனால் கடந்த 2016 முதலாக தனது செல்போன் உற்பத்தியை நிறுத்திக் கொண்டது.

இந்நிலையில் ஒரு சில நிறுவனங்களுக்காக மட்டும் ப்ளாக்பெர்ரி இயங்குதளம் செயல்பட்டு வந்த நிலையில் இன்று முதல் தனது இயங்குதள சேவையை நிறுத்துவதாக ப்ளாக்பெர்ரி தெரிவித்துள்ளது. இதனால் ப்ளாக்பெர்ரி 10, 7.1 மற்றும் அதற்கு முந்தைய ஓஎஸ் மொபைல்களை இனி பயன்படுத்த முடியாது என கூறப்பட்டுள்ளது.