மைக்ரோசாப்ட், கூகுள் நிறுவனங்களை பின்னுக்கு தள்ளிய அமேசான் !
சர்வதேச அளவில் க்ளவுட் சேவை துறையில் முக்கிய நிறுவன்ங்களாகக் கருதப்படுவது மைக்ரோசாப்ட், கூகுள், அலிபாபா ஆகிய நிருவனங்கள் ஆகும். இந்த முன்னணி நிறுவனங்களை பின்னுக்குத்தள்ளு அமேசான் நிறுவனம் முதலிடம் பிடித்துள்ளது.
காட்னர் இன் கார்பரேசன் என்ற நிறுவனத்தின் சாரில் வெளியிடப்பட்டுள்ள இந்த ரேங்க் பட்டியலில் அமேசான் முதலிடம் பிடித்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது.
காட்னர் நிறுவனத் துணைத்தலைவர் சித் நாக் இதுகுறித்து கூறியதாவது : சர்வதேச நிறுவனங்கள் பெரும் போட்டியாக உருவெடுத்துள்ள க்ளவுட் சந்தையில், தரமான மற்றும் வசதியாக சேவையை தரும் நிறுவனங்கள் தான் வெற்றியைப் பெற முடியும் என்று தெரிவித்தார்.
மேலும் க்ளவுட் சந்தையில், டாப் 5 நிறுவனங்களில் பங்களிப்பு 75 % சதவீதம் கொண்டுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டில் அமேசான் நிறுவனம் 15. 5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஈட்டி முதலிடம் பிடித்துள்ளது.இந்நிறுவம் இதற்கு முந்தைய ஆண்டைவிட 27% அதிக வளர்ச்சியை பெற்றுள்ளது. இதற்கு அடுத்து மைக்ரோசாப்ட் நிறுவனம் (2018) 5 பில்லியல் அமெரிக்க டாலர்களுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.மூன்றாவதாக சினாவின் பிரமாண்ட நிறுவனமான அலிபாபா (92.6 வளர்ச்சி ) மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.
Amazon,Microsoft, Google, companies, alibaba, china , america, கூகுள் , அலிபாபா, மைர்ரோசாப்ட், க்ளவுட் சந்தை