திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: வெள்ளி, 24 நவம்பர் 2017 (05:23 IST)

துப்பாக்கி பட பாணியில் ஒரே நேரத்தில் 15 தலைகளை வெட்டிய தீவிரவாதிகள்

விஜய் நடித்த 'துப்பாக்கி' படத்தில் ஒரே நேரத்தில் 16 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்படுவார்கள். இதேபோல் காபூலில் ஒரே நேரத்தில் 15 பேர்களின் தலையை வெட்டி தீவிரவாதிகள் செய்துள்ள அட்டூழியம் உலகையே உலுக்கியுள்ளது





ஈராக், மற்றும் சிரியாவில் ஐஎஸ் தீவிரவாதிகளின் ஆதிக்கம் குறைந்துள்ள நிலையிலும் ஆப்கானிஸ்தானில் இன்னும் தீவிரவாதிகளின் அட்டகாசம் ஓயவில்லை. குறிப்பாக இந்த நாட்டில் ஐஎஸ் அமைப்பினர்களுக்கும் தலிபான் அமைப்பினர்களுக்கும் அவ்வப்போது மோதல் நடந்து வருகிறது.

இந்த நிலையில் தலைநகர் காபூர் அருகேயுள்ள நான்கார்ஹர் மாகாணத்திற்குள் ஐ.எஸ் அமைப்பினர் நேற்று ஊடுருவி கடுமையாக தாக்குதல் நடத்தினர். இதற்கு பதில் தாக்குதல் நடத்திய தலிபான் தீவிரவாதிகள் 15 ஐஎஸ் தீவிரவாதிகளை பிடித்து அவர்களுடைய தலைகளை ஒரே நேரத்தில் வெட்டித்தள்ளினர். இதனால் அந்நாட்டில் பெரும் பதட்டம் நிலவியுள்ளது.