1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: செவ்வாய், 6 ஜூன் 2017 (05:30 IST)

லண்டன் தாக்குதலுக்கு காரணம் பாகிஸ்தான் தீவிரவாதிகள்:

சமீபத்தில் லண்டன் மாநகரில் நிகழ்ந்த தொடர் தாக்குதலுக்கு ஐஎஸ்.ஐ பொறுப்பேற்று கொண்டாலும் இந்த தாக்குதலில் ஈடிபட்டவர்களில் ஒருவன் பாகிஸ்தானை சேர்ந்த வாலிபன் என்பது தெரியவந்துள்ளது.



 


சமீபத்தில்  லண்டன் நகரின் பாலம், பாரோ மார்க்கெட், வாக்ஸ்ஹால் ஆகிய இடங்களில்  தீவிரவாதிகள் கத்தியால் குத்தியும், வேனை விட்டு பொதுமக்கள் மீது மோதியும், துப்பாக்கியால் சுட்டும் தொடர் தாக்குதலை நடத்தினர்.

இந்த கொடூரமான தாக்குதலை நடத்திய 3 தீவிரவாதிகளை இங்கிலாந்து போலீசார் சுட்டுக்கொன்றனர். இருப்பினும் சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதிகளை அடையாளம் காணும் பணி நடைபெற்றது.

இந்நிலையில் கொல்லப்பட்ட தீவிரவாதிய்யின் ஒருவன் பெயர் குராம் சாஷத் பட் என்பவன் என்றும் பாகிஸ்தானை சேர்ந்த இவன் இங்கிலாந்தில் குடியுரிமை பெற்று லண்டனில் வாழ்ந்து ஐஎஸ்.ஐ அமைப்புக்காக வேலை செய்தவன் என்றும் தெரியவந்துள்ளது.

அதேபோல் கொல்லப்பட்ட மற்றொரு தீவிரவாதி லிபியா நாட்டை சேர்ந்தவன் என்றும் மூன்றாவது தீவிரவாதி குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.