1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 2 அக்டோபர் 2018 (10:21 IST)

1200 கைதிகள் எஸ்கேப் - அதிர்ச்சியில் சிறைத் துறை அதிகாரிகள்

இந்தோனேஷியாவில் நிலநடுக்கத்தைப் பயன்படுத்தி 1200 கைதிகள் சிறையில் இருந்து தப்பித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திடுள்ளது.
இந்தோனேஷியாவில் 7.5 ரிக்டர் அளவு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. மேலும் 5 அடி உயரத்தில் பயங்கர ஆக்ரோஷத்துடன் சுனாமி தாக்கியது. இதனால் பல கட்டிடங்களும், கார்களும் சுனாமியில் அடித்துச் செல்லப்பட்டது. 
 
கடற்கரை திருவிழாவில் பங்கேற்ற ஏராளமான மக்கள் சுனாமியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். சுமார் 1200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் நிலநடுக்கத்தை பயன்படுத்தி நகரெங்கிலும் இருந்த் 3 சிறைகளிலிருந்த 1200 கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர். சிலர் தப்பிச் செல்லாமல் சிறையிலே இருந்துள்ளனர்.
 
இதுகுறித்து பேசிய இந்தோனேஷிய சிறைத்துறை அதிகாரி ஒருவர், தப்பித்தோடிய அனைவரையும் தேடும் பணி நடைபெற்று வருவதாகவும், விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.