1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 1 அக்டோபர் 2018 (07:49 IST)

இந்தோனேஷியா நிலநடுக்கம்: பலரது உயிரை காப்பாற்றியவர் பரிதாப மரணம்

சமீபத்தில் இந்தோனேஷியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் அதன்பின் ஏற்பட்ட சுனாமியால் சுமார் 800க்கும் அதிகமானோர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். இந்த நிலையில் மீட்புப்பணிகள் அங்கு துரிதமாக நடைபெற்று வரும் நிலையில் விமான போக்குவரத்துத்துறை ஊழியர் ஒருவர் தனது உயிரையும் பொருட்படுத்தாமல் பலரது உயிரை காப்பாற்றிய நெகிழ்ச்சியான சம்பவம் தற்போது தெரிய வந்துள்ளது.

நிலநடுக்கம் ஏற்பட்டபோது விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையில் இருந்த 21 வயது  அந்தோனியஸ் குனாவன் அகுங் விமான நிலைய பணியில் இருந்தார். நிலநடுக்கம் காரணமாக கிளம்பவிருந்த ஒரு விமானத்தை பாதுகாப்பாக அனுப்ப அகுங், தனது உயிரை பொருட்படுத்தாமல் விமானம் பாதுகாப்பாக கிளம்பிச் செல்லும்வரை பணியில் இருந்து பைலட்டுக்களுக்கு குறிப்புகளள கொடுத்தார்.

விமானம் டேக் ஆஃப் ஆனவுடன் எதிர்பாராத வகையில் அந்தக் கட்டடம் இடிந்து விழுந்ததில் அகுங் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தார். மற்றவர்களை போல அவரும் விமான நிலைய கட்டிடத்தில் இருந்து ஓடியிருந்தால் உயிர் தப்பியிருக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.