வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 30 செப்டம்பர் 2018 (14:55 IST)

ருத்ரதாண்டவம் ஆடிய இந்தோனேஷிய நிலநடுக்கம் - பலி எண்ணிக்கை 832 ஆக உயர்வு

இந்தோனேஷியாவில் சுனாமி மட்டும் நிலநடுக்கம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 832 ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தோனேஷியாவில் 7.5 ரிக்டர் அளவு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. மேலும் ஆக்ரோஷத்துடன் சுனாமி தாக்கியது. இதனால் பல கட்டிடங்களும், கார்களும் சுனாமியில் அடித்துச் செல்லப்பட்டது. சுனாமி மற்றும் நிலநடுக்கம் காரணமாக உயிரிழந்தவர்களின் நேற்று எண்ணிக்கை 400ஐ எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியது. 
 
இந்நிலையில் பலி எண்ணிக்கை 832 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பலர் அடிப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், பலர் காணாமல் போயிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.