Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

இந்தியா கொடுத்தும் வாங்கி கொள்ளாத பாகிஸ்தான்

Last Modified: புதன், 2 ஆகஸ்ட் 2017 (14:38 IST)

Widgets Magazine

காஷ்மீரில் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதியின் உடலை எடுத்துச் செல்லுமாறு பாகிஸ்தான் தூதரகத்தை இந்தியா முதல்முறையாக கேட்டுக் கொண்டது.


 

 
காஷ்மீர் மாநிலம் புலவாமா மாவட்டத்தில் உள்ள ஹக்ரிபுரா என்ற கிராமத்தில் லஸ்கர் இ தொய்பா கமாண்டர் அபுதுஜானாவை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியைச் சேர்ந்த அபுதுஜானா பலமுறை பாதுகாப்பு படையினரிடம் தப்பி வந்துள்ளார்.
 
இவரது தலைக்கு அரசு ரூ.15 லட்சம் விலை நிர்ணயித்திருந்தது. அபுதுஜானா நிறைய பெண்களுடன் பழகி வந்துள்ளார். இதன் மூலம் பாதுகாப்பு படையினர் அவருடன் பழகிய பெண்களை வைத்து அவரை பிடிக்க திட்டமிட்டனர். அதன்படி இவருடன் பழகிய பெண் ஒருவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் பாதுகாப்பு படையினர் அபுதுஜானாவை சுட்டனர். சுமார் 7 மணி நேரம் துப்பாக்கி சண்டைக்கு பின் அபுதுஜானா கொல்லப்பட்டார்.
 
இதையடுத்து அபுதுகானாவின் உடலை எடுத்துச் செல்லுமாறு பாகிஸ்தான் தூதரகத்தை இந்தியா கேட்டுக் கொண்டது. ஆனால் அவர்கள் மறுப்பு தெரிவிக்க இந்தியாவிலே அடக்க செய்யப்பட்டது. மேலும் தீவிரவாதியின் உடலை எடுத்துச் செல்லுமாறு பாகிஸ்தானிடம் இந்தியா கேட்டுக்கொண்டது இதுதான் முதல்முறையாகும்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

தினகரனுக்கு எதிராக பேசினால் பதவி காலி - ஜெயக்குமாரை எச்சரிக்கும் வெற்றிவேல்

அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு எதிராக கருத்து கூறிவருவதை அமைச்சர் ...

news

16 வயது மகளிடம் நிர்வாண வீடியோ கேட்டு மிரட்டிய தந்தையின் வக்கிரம்!

பஞ்சாப் மாநிலத்தில் 41 வயதான தந்தை ஒருவர் தனது 16 வயது மகளிடம் அவளது நிர்வாண வீடியோவை ...

news

62 வயது மூதாட்டியை கொடூரமாக கற்பழித்து கொன்ற கும்பல்

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள 62வயது மூதாட்டியை கொடூரமாக கற்பழித்து கொலை செய்த சம்பவம் ...

news

ஓவியாவிற்கு ஓட்டு போடுங்கள் : ஹோட்டல் ரசீதிலும் அக்கப்போர்..

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றுள்ள நடிகை ஓவியாவிற்கு நாளுக்கு நாள் ஆதரவு அதிகரித்துக் ...

Widgets Magazine Widgets Magazine