Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஆபாச எஸ்.எம்.எஸ் பிரச்சனை: இம்ரான்கான் அரசியல் எதிர்காலம் என்ன ஆகும்?


sivalingam| Last Modified சனி, 5 ஆகஸ்ட் 2017 (05:19 IST)
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், எதிர்கட்சித் தலைவராக இருப்பவருமான இம்ரான் கான் மீது அவரது கட்சியைச் சேர்ந்த பெண் எம்.பி ஆயிஷா குலால் என்பவர் பாலியல் புகார் தெரிவித்தார் என்ற செய்தி ஏற்கனவே வெளியானது.


 
 
இம்ரான் கான், தனக்கு ஆபாச எஸ்.எம்.எஸ்கள் அனுப்பி தொல்லை செய்வதாக அந்த எம்பி குற்றம் சாட்டினார். இந்த பிரச்சனை பாகிஸ்தான் முழுவதும் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்திய  நிலையில், பாகிஸ்தானின் புதிய பிரதமராக பொறுப்பேற்ற ஷாஹித் கஹான் அப்பாஸி தலைமையில் இதுகுறித்து விசாரணை செய்ய அமைச்சரவை                 கூட்டம் ஒன்று நடத்தப்பட்டது.
 
இந்த அமைச்சரவைக் கூட்டத்தில், இம்ரான் கான் விவகாரம் குறித்து நாடாளுமன்றக் குழு மூலம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆயிஷா குலாலையின் குற்றச்சாட்டை இம்ரான்கான் மறுத்துள்ள நிலையில் இந்த குழு உண்மையை கண்டறியும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த குழு கொடுக்கும் அறிக்கையை பொருத்துதான் இம்ரான்கனின் அரசியல் எதிர்காலம் இருப்பதாக கூறப்படுகிறது. 


இதில் மேலும் படிக்கவும் :