வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. சைவம்
Written By Sasikala

ஆரோக்கியம் கொண்ட உளுத்தம் மாவு புட்டு...!

தேவையானவை:
 
தோல் உள்ள உளுந்து - 200 கிராம்
புழுங்கல் அரிசி - 100 கிராம்
தேங்காய் - ஒரு மூடி
நெய், நல்லெண்ணெய் - 3 ஸ்பூன்
ஏலக்காய் - சிறுதளவு
உப்பு, சர்க்கரை, மிளகுத் தூள் - தேவையான அளவு

 
செய்முறை:
 
உளுந்தையும், அரிசியையும் தனித்தனியே நன்றாக சுத்தம் செய்து அரைத்த மாவை ஒன்றாக கலந்து, இதில் தேவையான அளவு உப்பு போட்டு, சிறுது தண்ணீர் தெளித்து கெட்டியாக சற்றே கரகரப்பான பதத்தில் பிசைந்து கொள்ளவும். அதாவது புட்டு மாதிரி பிசைவது போல் பிசைந்து கொள்ளவும்.
 
புட்டு மாதிரி உதிரியாக வேக வைக்கவும். வேகும்போதே உளுந்து வாசனை கமகமக்கும். புட்டு நன்கு வெந்தவுடன்  பாத்திரத்தில் கொட்டி நன்கு உதிர்த்துவிட்டு, அதில் துருவிய தேங்காய், நெய், நல்லெண்ணெய், சர்க்கரை சேர்த்து கிளறவும்.  சூடாக சாப்பிட நல்ல சுவையாக இருக்கும். இருமள், சளி இருப்பவர்கள், மிளகுத் தூள் சேர்த்துச் சாப்பிடலாம். மிகவும் நல்லது.
 
பலன்கள்:
 
உளுந்தில் தேவையான கால்சியம், புரதம் இருக்கின்றன. தோலுடன் சேர்ப்பதால், நார்ச் சத்தும் கிடைக்கும் குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கும், எலும்பு உறுதிக்கும் மிகவும் நல்லது. பெண்களுக்கு கர்ப்பப்பை பலமாகும். இடுப்பு வலி வராமல் இருக்கும்  ஆண்களுக்கு உடல் பலம் பெறும்.
 
குறிப்பு:
 
உளுந்தை சற்று லேசாக வறுத்து அரைத்து கொள்ளவும். நல்ல வாசனையாகவும், சுவையாகவும் இருக்கும்.