சூப்பரான சுவையில் கடலைப்பருப்பு சட்னி செய்ய...!!
தேவையான பொருட்கள்:
கடலைப்பருப்பு - 1/2 கப்
தேங்காய் துண்டு - 2
வர மிளகாய் - 5
தக்காளி - 1 பெரியது
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
தாளிக்க தேவையான பொருட்கள்:
கடுகு - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
உளுத்தம் பருப்பு - சிறிதளவு
பெருங்காயத்தூள் - சிறிதளவு
எண்ணெய் - 1 ஸ்பூன்
செய்முறை:
வாணலியை அடுப்பில் வைத்து அதில் கடலைப்பருப்பை போட்டு பொன்னிறமாக வறுத்து இறக்கி குளிர வைக்கவேண்டும். அடுத்து தேங்காய், வரமிளகாய், தக்காளி, கறிவேப்பிலையை தனித்தனியாக போட்டு நன்றாக வறுத்து குளிர வைக்கவும்.
அனைத்தும் நன்றாக ஆறியதும் அதனை மிக்ஸியில் போட்டு, அத்துடன் தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து நன்கு மென்மையாக அரைத்து கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து சூடானதும், அதில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை உளுத்தம் பருப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்து அரைத்து சட்னியில் ஊற்றி கிளறவும். சுவையான கடலைப்பருப்பு சட்னி தயார்.