புதன், 25 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. சைவம்
Written By Sasikala

சிறு கீரை கூட்டு செய்ய...!

தேவையான பொருட்கள்:
 
சிறுகீரை - 1 கட்டு (சுத்தம் செய்து நறுக்கி வைக்கவும்)
பாசி பருப்பு - 1 1/2 கைப்பிடி
சிறிய வெங்காயம் - 10 என்னம் (பொடியாக நறுக்கியது)
பூண்டு - 6 (தோல் நீக்கியது)
பச்சை மிளகாய் - 2
சீரகம் - 1 டீஸ்பூன்

செய்முறை: 
 
முதலில் கீரை, பருப்பு, வெங்காயம் - பாதி அளவு , பூண்டு, பச்சைமிளகாய், சீரகம் எல்லாம் சேர்த்து குக்கரில் வைத்து வேகவைக்கவேண்டும் .பின் எடுத்து மிக்ஸியில் ஒரு அடி அடிக்கவேண்டும்.
 
பிறகு வாணலியில் எண்ணைய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,உளுந்து தாளித்து வெங்காயத்தில் பாதியை போட்டு நன்கு வதக்கி பின் அதனுடன் கறிவேப்பிலை, சிவப்புமிளகாய் போட்டு வதக்கி பின் கீரை கலவையை கொட்டவும்.பின்னர் உப்பு சேர்த்து ஒரு கொதி கொதித்ததும் இறக்கி பறிமாறவும். சுவையான சிறு கீரை  கூட்டு தயார்.