திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. சைவம்
Written By

கடலைப் பருப்பு பாயசம் செய்ய...!

தேவையான பொருட்கள்: 
 
கடலைப்பருப்பு - ஒரு கப்
பாசிப்பருப்பு - ஒரு கப்
வெல்லம் - ஒரு கப்
முந்திரி, திராட்சை - தேவையான அளவு
நேந்திரப் பழத் துண்டுகள் - சிறிதளவு
செய்முறை: 
 
வெறும் வாணலியில் முதலில் கடலைப் பருப்பை பொன்னிறமாக வறுக்கவும். முக்கால் அளவு வறுபட்டபின் அத்துடனே பாசிப்பருப்பையும் போட்டு பொன்னிறமாக வறுக்கவும். வறுத்த பருப்புகளை நீரில் அலசி, வேக விடவும். இது வெந்து கொண்டிருக்கும் போதே, பக்கத்து அடுப்பில் வெல்லத்தைத் தட்டி தண்ணீரில் போட்டு கொதிக்க  வைக்கவும். இத்துடன் வெந்த பருப்பைப் போட்டுக் கிளறினால் சுவையான கடலைப்பருப்பு பாயசம் தயார்.