வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. சைவம்
Written By Sasikala

சுவையான பக்கோடா குழம்பு செய்ய...!!

தேவையான பொருள்கள்:
 
பக்கோடா - 100 கிராம் 
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி 
உப்பு - தேவையான அளவு                                                                 
லேசாக வறுத்து அரைக்க -
மிளகாய் வத்தல் - 3
கொத்தமல்லி - 3 மேஜைக்கரண்டி 
சீரகம் - 1 தேக்கரண்டி 
பட்டை - 1 இன்ச் அளவு 
கிராம்பு - 2
                                                              
அரைக்க தேவையான பொருள்கள்:
 
தேங்காய் துருவல் - 50 கிராம் 
தக்காளி - 1
மல்லித்தழை - சிறிது                                                                           
 
தாளிக்க தேவையான பொருள்கள்:
 
நல்லெண்ணெய் - 3 மேஜைக்கரண்டி 
பட்டை - 1/2 இன்ச் அளவு 
கிராம்பு  - 1
வெங்காயம் - 1
கறிவேப்பிலை - சிறிது 

செய்முறை:
 
வெங்காயத்தை பொடிதாக நறுக்கி வைக்கவும். அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் அடுப்பை சிம்மில் வைத்து மிளகாய் வத்தல், கொத்தமல்லி, சீரகம், பட்டை, கிராம்பு  எல்லாவற்றையும் போட்டு சூடானவுடன் அடுப்பை அணைத்து விடவும். ஆறிய பிறகு மிக்ஸ்சியில் திரித்துக் கொள்ளவும்.    
                                                                                                                 
தேங்காய், தக்காளி, மல்லித்தழை மூன்றையும் மிக்ஸ்சியில் அரைத்துக் கொள்ளவும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு  போடவும். பிறகு கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து தாளிக்கவும். 
 
வெங்காயம் பொன்னிறமானதும் திரித்து வைத்துள்ள பொடி, மஞ்சள் தூள் சேர்த்து கிளறி அதோடு ஒரு கப் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து மசாலா வாடை போகும் வரை நன்கு கொதிக்க விடவும். 
                                                               
மசாலா வாடை அடங்கியதும் அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையை சேர்த்து குழம்பு கெட்டியானதும் அடுப்பை அணைக்கவும். குழம்பு சிறிது ஆறியவுடன் பக்கோடா துண்டுகளை சேர்க்கவும். உடனே கலக்க வேண்டாம். 
 
குழம்பு சூடாக இருக்கும் போது பக்கோடாவை போட்டால் பக்கோடா கரைந்து விடும். பக்கோடாவை குழம்பில் சேர்த்து உடனே கலக்கி விட்டாலும் பக்கோடா கரைந்து விடும். லேசாக கடாயை ஆட்டி விட்டு பக்கோடாவை குழம்பில் ஊற விடவும். பிறகு பரிமாறவும். சுவையான பக்கோடா குழம்பு தயார்.