வியாழன், 26 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. சைவம்
Written By Sasikala

எளிமையாக பொரி உருண்டை செய்ய !!

தேவையான பொருட்கள்: 
 
பொறி - 3 கப் 
வெல்லம் - ஒரு கப் 
ஏலக்காய் தூள் - ஒரு டீஸ்பூன் 
தண்ணீர் - ஒரு கப் 

செய்முறை: 
 
ஒரு கடாயில் வெல்லத்துடன் சிறிதளவு தண்ணீரை சேர்த்து கொதிக்க வைக்கவும். வெல்லம் கரைந்ததும் அதனை வடிகட்டியால் வடித்துக்கொள்ளவும். 
 
பின்னர் அதனுடன் ஏலக்காய் தூளை சேர்த்து நன்றாக கலக்கவும். வெல்லம் பாகுவாக மாறி கம்பி பதம் வந்ததும், பொரியை எடுத்து மெதுவாக அளந்து சேர்த்து கலக்கவும். வெல்லப்பாகில் நன்றாக கலந்தவுடன் மிதமான சூட்டில் உருண்டை பிடித்தால் இனிப்பான பொரி உருண்டை தயார்.