செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. சைவம்
Written By Sasikala

சுவை மிகுந்த பன்னீர் மசாலா செய்ய !!

தேவையான பொருட்கள்:
 
பன்னீர் - 200 கிராம்
பட்டர் - 2 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
மிளகுப் பொடி - 1டீஸ்பூன்
மஞ்சள் பொடி - 1 டீஸ்பூன்
கிரீன் சில்லி சாஸ் - 1டீஸ்பூன்
டொமேட்டோ சாஸ் - 1டீஸ்பூன்
குடை மிளகாய் - 1/2 கப்
இஞ்சி விழுது - 1 ஸ்பூன்
வெங்காயம் - 1/2 கப்
பூண்டு - 8
பச்சை மிளகாய் - 3
கறிவேப்பிலை - சிறிதளவு
சோள மாவு - 1டீஸ்பூன்
எலுமிச்சை - 1
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
 
முதலில் கடாய் அடுப்பில் வைத்து அதில் பட்டர் சேர்த்து உருகியதும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து பின்பு வெங்காயம், இஞ்சி, பூண்டு, சேர்த்து வதக்குங்கள். பொன்னிறமானதும் குடை மிளகாயை சேர்க்கவும். 
 
பின்னர் மஞ்சள், கிரீன் சில்லி சாஸ், டொமேட்டோ சாஸ் சேர்த்து வதக்கவும். பச்சை வாசனை போனதும் பன்னீர் சேர்த்து வதக்கவும். அதன்பின்பு தேவையான அளவு உப்பு சேர்த்து கொஞ்சம் தண்ணீர் விட்டு வேக வைக்கவும்.
 
பிறகு சோள மாவை தண்ணீரில் கலந்து ஊற்றி கிளறுங்கள். கெட்டிப்பதம் வரும்போது எலுமிச்சை  சாறை ஊற்றி பிரட்டி விட்டு அடுப்பை அணைத்துவிடவும். அவ்வளவுதான் சுவையான பன்னீர் மசாலா தயார்.