1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. சைவம்
Written By

சுவையான மெதுவடை செய்ய...!

தேவையான பொருட்கள்:
 
உளுத்தம் பருப்பு - 1 கப்
அரிசி - 1/2 ஸ்பூன்
உப்பு - 1/2 ஸ்பூன்
இஞ்சி ஒரு சிறு துண்டு
பச்சை மிளகாய் - 2
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
செய்முறை:
 
உளுந்தை நன்றாக கழுவி, தண்ணீரை வைட்த்து அதில் உப்பு சேர்த்து கிரைண்டரில் நன்றாக அரைத்துக் கொள்ளவும். மாவு கெட்டியாகவும்,  அதே சமயம் கையில் எடுத்தால் லேசாகவும் இருக்க வேண்டும். சிறிது மாவை எடுத்து தண்ணீரில் போட்டால், மாவு தண்ணீரில் மிதக்க  வேண்டும். அதுதான் சரியான பதம்.
பச்சை மிளகாயை வானலியில் விட்டு அடுப்பில் வைக்கவும். எண்ணெய் காய்ந்ததும் கைகளை தண்ணீரில் நனைத்துக் கொண்டு ஒரு எலுமிச்சம் பழ அளவு மாவை எடுத்து உருட்டி, உள்ளங்கையில் வைத்து லேசாக அழுத்தவும். பின் அதன் நடுவில் ஒரு துளை செய்து எண்ணெய்யில் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். சுவையான மெதுவடை தயார்.