ஞாயிறு, 17 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. சைவம்
Written By Sasikala

வாழைக்காய் மிளகு வறுவல் செய்ய !!

தேவையான பொருட்கள்:
 
வாழைக்காய் - 1
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
கடுகு - 1 டீஸ்பூன்
தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
இஞ்சி - 1/2 இன்ச்
பூண்டு - 5
மிளகு - 3 டீஸ்பூன்

செய்முறை:
 
* வாழைக்காயின் தோலை நீக்கிவிட்டு, வேண்டிய வடிவில் வெட்டி கொள்ளவும். வெட்டிய வாழைக்காயை பாதியளவு வேகவைத்து கொள்ளவும்.
 
* வேக வைத்த வாழைக்காயை ஒரு பௌலில் போட்டு, அதில் உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து பிரட்டி 20 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள  வேண்டும்.
 
* பிறகு அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு, தண்ணீர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். அடுத்து ஒரு வாணலியை அடுப்பில்  வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்த பின், ஊறவைத்துள்ள வாழைக்காயை சேர்த்து 5 நிமிடம் கிளறவும்.
 
* அடுப்பை மிதமான தீயில் வைத்து அரைத்து வைத்துள்ள மசாலா மற்றும் உப்பு சேர்த்து நன்கு பிரட்டி விடவேண்டும். பின் அதில் லேசாக தண்ணீர் தெளித்து, மூடி  வைத்து 2 நிமிடம் வாழைக்காயை வேகவைத்து இறக்கினால், வாழைக்காய் மிளகு வறுவல் தயார்.