வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. சைவம்
Written By Sasikala

பன்னீர் ஸ்டஃப்டு குடைமிளகாய் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:
 
குடைமிளகாய் - 4
ஸ்வீட்கார்ன் - 1 கப் 
உருளைக்கிழங்கு - 3
வெங்காயம் - 2 
பன்னீர் - அரை கப் 
மாங்காய் - சிறியது 1
மஞ்சள்தூள், இஞ்சி விழுது - தலா 1 தேக்கரண்டி
மிளகு, சீரகத்தூள் - தலா 1 தேக்கரண்டி
சோயா சாஸ், தக்காளி சாஸ் - தலா 2 தேக்கரண்டி
கார்ன்ஃப்ளார் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
கொத்தமல்லி - ஒரு கைப்பிடியளவு

 
செய்முறை:
 
ஸ்வீட்கார்ன், உருளைக்கிழங்கை இரண்டையும் தனித்தனியாக வேக வைத்து கொள்ளவும். உருளைக்கிழங்கை மட்டும் மசித்து  கொள்ளவும். கொத்தமல்லி, வெங்காயம், மாங்காயை பொடியாக நறுக்கி கொள்ளவும். பன்னீரை துருவிக் கொள்ளவும். 
 
கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, காய்ந்ததும் வெங்காயம், இஞ்சி விழுது, வெங்காயம் நற்காக வதங்கியதும் இதில் வேகவைத்த ஸ்வீட்கார்ன், மாங்காய் சிறிதாக் நறுக்கியது, மசித்த உருளைக்கிழங்கு, பன்னீர் மற்றும் மஞ்சள்தூள் சேர்த்து  வதக்கவும். பின்னர் சோயா சாஸ், தக்காளி சாஸ், மிளகு, சீரகத்தூள், உப்பு சேர்த்து கிளறவும். இதை அடுப்பிலிருந்து இறக்கி  கொத்தமல்லித் தழை தூவி கலந்து வைக்கவும்.
 
குடைமிளகாயின் உள்ளிருக்கும் விதைகளை நீக்கிவிட்டு, ஒவ்வொரு மிளகாயிலும் தயாரித்து வைத்திருக்கும் கலவையை  நிரப்பவும். கார்ன்ஃப்ளார் மாவை சிறிது தண்ணீரில் கலந்து போஸ்ட் போல செய்து, மிளகாய்களின் மேல் பகுதியை மூடவும். 
 
கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு ஸ்டஃப்டு குடைமிளகாய்களைப் பரவலாக வைத்து மூடி, 15 நிமிடம் வேக விடவும்.  சூப்பரான ஸ்டஃப்டு குடைமிளகாய் தயார். ஆறியதும் சாஸ் அல்லது கொத்தமல்லி சட்னியுடன் சாப்பிடசுவையாக இருக்கும்.