1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. சைவம்
Written By Sasikala

உடலுக்கு ஆரோக்கியம் தரும் பப்பாளி ஜுஸ் எப்படி செய்வது...?

தேவையான பொருட்கள்:
 
பப்பாளி - 1 கப்
ஆரஞ்சு ஜுஸ் - 1/2 கப்
எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்
மிளகுத்தூள் - 1/8 டீஸ்பூன்
தேன் - 2 டீஸ்பூன்
தண்ணீர் - 1/2 கப்
ஐஸ் கட்டி - 6

செய்முறை:
 
முதலில் பப்பாளியின் தோல், விதைகளை நீக்கி விட்டு சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். மிக்ஸியில் பப்பாளி பழம், தேன், எலுமிச்சை சாறு, தண்ணீர், உப்பு, மிளகுத்தூள், ஐஸ் கட்டி சேர்த்து மைய அரைத்துக் கொள்ளவும்.
 
தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து கொள்ளலாம். அரைத்த ஜூஸை ஒரு கப்பில் ஊற்றி அதன் மேலாக ஐஸ் கட்டி போட்டு பருகலாம். சூப்பரான பப்பாளி ஜுஸ் தயார்.