வீட்டிலேயே கரம் மசாலா பொடி செய்வது எப்படி...?
தேவையான பொருள்கள்:
பெருஞ்சீரகம் (சோம்பு) - 100 கிராம்
பட்டை - 10 கிராம்
கிராம்பு - 10 கிராம்
அன்னாசிப்பூ - 10 கிராம்
ஏலக்காய் - 10 கிராம்
செய்முறை:
எல்லா பொருள்களையும் வெயிலில் 2 மணி நேரம் காய வைத்துக் கொள்ளவும். அல்லது அடுப்பில் கடாயை வைத்து சூடானவுடன் அடுப்பை அணைத்து விட்டு அந்த சூட்டில் எல்லா பொருள்களையும் போட்டு கிளறி ஆற விடவும்.
பின்னர் நன்றாக ஆறிய பின் மிக்ஸ்சியில் திரிக்கவும். பிறகு பேப்பரில் பரப்பி வைக்கவும். சூடு ஆறியதும் ஒரு காற்றுப்புகாத பாட்டிலில் போட்டு வைக்கவும். கரம் மசாலா பொடியை பிரியாணி, குருமா வகைகளுக்கு உபயோகப்படுத்தலாம்.