வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. சைவம்
Written By Sasikala
Last Updated : திங்கள், 13 ஜூன் 2022 (13:49 IST)

சுவையான முறையில் கோங்குரா சட்னி செய்வது எப்படி...?

Gongura Chutney
தேவையான பொருட்கள்:

புளிச்ச கீரை - 1 கட்டு
வர மிளகாய்  - 10
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
கடலைப் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
தனியா  - 1 1/2 டேபிள் ஸ்பூன்
பூண்டு - 5 பற்கள்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

தாளிக்க தேவையான பொருட்கள்:

கடுகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
பூண்டு - 2 பற்கள் (தட்டியது)
வர மிளகாய்  - 2
கறிவேப்பிலை  - சிறிது
எண்ணெய்  - 4 டேபிள் ஸ்பூன்



செய்முறை:

முதலில் புளிச்ச கீரையை நன்கு சுத்தம் செய்து, நீரில் அலசி, பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், புளிச்ச கீரையை சேர்த்து 5 நிமிடம் வதக்கி இறக்கி, ஆற வைக்கவேண்டும்.

பிறகு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெந்தயம், தனியா, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, வரமிளகாய் ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாக வறுத்து இறக்கி, அதனையும் குளிர வைக்க வேண்டும்.

பின்பு மிக்ஸியில் வறுத்து வைத்துள்ள பொருட்களுடன், புளிச்ச கீரை, பூண்டு மற்றும் உப்பு சேர்த்து கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.

இறுதியாக ஒரு சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு சேர்த்து தாளித்து, பின் அதில் வரமிளகாய், தட்டி வைத்துள்ள பூண்டு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, சட்னியில் ஊற்றி கிளறினால், சுவையான கோங்குரா கோங்குரா சட்னி தயார்.

கோங்குரா சட்னி, சமையல், சைவம், சட்னி வகைகள், சமையல் குறிப்புகள், ஆந்திரா ஸ்டைல், Gongura Chutney, Cooking, Vegetarian, Chutney  varieties, Cooking tips, Recipe, Andhra Style