Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சத்துக்கள் மிகுந்த வெஜிடபிள் போண்டா செய்ய வேண்டுமா?....

Widgets Magazine

தேவையான பொருள்கள்:
 
கடலை மாவு - 1கப்
அரிசி மாவு - 5 கப்
உப்பு - தேவைக்கேற்ப
மிளகாய்ப்பொடி - 3/4 டீஸ்பூன்
சமையல் சோடா - 2 சிட்டிகை
 
காய்கறி மசாலா செய்ய:
 
பொடியாக நறுக்கிய வெங்காயம் -1/2 கப்
பொடியாக அரிந்த காய்கறித் துண்டுகள் - 3கப்
(காலிப்ளவர், உருளைக்கிழங்கு, பீன்ஸ், கேரட்)
உரித்த பட்டாணி - 1/4 கப்
இஞ்சி பூண்டு விழுது - 1/2 கப்
நசுக்கிய பச்சை மிளகாய் - 11/2டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
கொத்தமல்லித்தழை - 1/2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
லெமன் - 1

 
செய்முறை:
 
நறுக்கிய காய்கறிகளில் தண்ணீர் சேர்க்காமல் ஆவியில் பிரஷர் குக்கரில் வேக வைக்கவும். கடாயில் சிறிது எண்ணெய் விட்டுச்  சூடாக்கி இஞ்சி - பூண்டு விழுது, பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
 
அதில் மிளகாய் விழுது, மஞ்சள் தூள் சேர்த்து வெந்த காய்கறிகளைச் சேர்க்கவும். பெரிய அடுப்பில் சிறிது நேரம் நன்கு  வதக்கவும். ஈரம் நன்கு வற்றி காய்கறிக் கலவை ஒன்றுசேர்ந்து வரும்போது உப்பு, நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து கலந்து  அடுப்பிலிருந்து இறக்கவும்.
 
மசாலா நன்கு ஆறியதும் எலுமிச்சை அளவு உருண்டைகள் செய்யவும். சலித்த கடலை மாவு, அரிசி மாவு, உப்பு சோடா,  மிளகாய்த்தூள் தண்ணீர் சேர்த்து கலந்து கொஞ்சம் சொஞ்சமாகத் தண்ணீர் சேர்த்து கட்டிதட்டாமல் மாவைத் தயாரிக்கவும். 
 
செய்து வைத்துள்ள மசாலா உருண்டைகளை ஒவ்வொன்றாக அதில் தேய்த்து எடுத்து சூடான எண்ணெயில் போட்டு  பொரிக்கவும். சூடான வெஜிடபிள் போண்டா தயார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

ஸ்பைசி கோங்குரா (புளிச்சக்கீரை) சிக்கன் செய்ய தெரிந்து கொள்வோம்.....

கீரையை நன்றாக மண் போக அலசிக் கொள்ளவும். பின்பு இலையின் காம்பை நறுக்கி எடுத்து கீரையை ...

news

ஆட்டுக்கால் பாயா செய்ய வேண்டுமா?....

ஆட்டுக்காலை முதலில் வேக வைக்க வேண்டும். தண்ணீர் சேர்த்து குக்கரில் வேக வைத்துக் ...

news

கருவேப்பிலைப் பொடி செய்ய வேண்டுமா.. இதோ...

எண்ணெய் விடாமல் கருவேப்பிலை சுத்தம் செய்து ஒரு கடாயில் போட்டு நன்கு வறுத்துகொள்ளவும். ...

news

சுலபமான ஓட்ஸ் லட்டு செய்ய விருப்பமா....

ஓட்ஸ், தேங்காய் தனி தனியாக லேசாக பொன்னிறம் வரும் வரை வறுத்துக் கொள்ளவும். இரண்டையும் ...

Widgets Magazine Widgets Magazine