Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பன்னீர் கட்லெட் செய்ய தெரியுமா...?

Sasikala|
தேவையான பொருள்கள்:
 
பன்னீர் - 100 கிராம் 
உருளைக்கிழங்கு - 1
பெரிய வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 1
கொத்தமல்லி - சிறிது 
பிரட் தூள் - 1/2 கப் 
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி 
மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி 
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி 
உப்பு - தேவையான அளவு 
எண்ணெய் - தேவையான அளவு

 
செய்முறை:
 
பன்னீரை துருவிக்கொள்ளவும். வெங்காயம், கொத்தமல்லி, பச்சை மிளகாய் மூன்றையும் பொடிதாக நறுக்கி வைக்கவும்.  உருளைக்கிழங்கை தோலுரித்து மசித்துக்கொள்ளவும்.
 
ஒரு வாயகன்ற பாத்திரத்தில் துருவி வைத்துள்ள பன்னீர், நறுக்கி வைத்துள்ள வெங்காயம், கொத்தமல்லி, பச்சை மிளகாய் மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கு, இஞ்சி பூண்டு விழுது, மிளகுத்தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து வட்டமாக தட்டி பிரட் தூளில் பிரட்டி வைக்கவும்.
  
ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் கட்லெட்டுகளை போட்டு பொரித்தும் எடுக்கவும். இரு புறமும்  நல்ல பொன்னிறமானதும் எடுத்து விடவும். எல்லா கட்லெட்களையும் இதே முறையில் செய்யவும். இந்த அளவுக்கு 12  கட்லெட்கள் வரை வரும். சுவையான கட்லெட் தயார். தக்காளி சாஸுடன் பரிமாற சுவை அபாரம். நீங்களும் சுவைத்து  பருங்கள்.

Widgets Magazine

இதில் மேலும் படிக்கவும் :