வெள்ளி, 29 மார்ச் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. சைவம்
Written By

சுவை மிகுந்த ஆனியன் சமோசா செய்ய....!

தேவையான பொருட்கள்:
 
கோதுமை மாவு - 1 கப்
மைதா - 1 கப்
எண்ணெய் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
வெங்காயம் - 4
அவல் - 1 கப்
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 3
கொத்தமல்லி - தேவையான அளவு
எலுமிச்சை - 1
செய்முறை:
 
மைதா, கோதுமை, உப்பு, எண்ணெய் சேர்த்து தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு போல் பிசைந்து கொள்ளவும். 15 நிமிடம் ஊறவிடவும்.
 
ஒரு பாத்திரத்தில் வெங்காயம், அவல், மிளகாய் தூள், சீரகப் பொடி, நறுக்கிய பச்சை மிளகாய், உப்பு, கொத்தமல்லி, எலுமிச்சை சாறு சேர்த்து  கலந்து கொள்ளவும்.
 
சமோசா மாவை சப்பாத்தி போல் மெல்லியதாக திரட்டி கொள்ளவும். தோசை கல்லில் போட்டு ஒரு பக்கம் மட்டும் சூடுபத்தினால்  போதுமானது. மைதாவில் சிறிது தண்ணீர்விட்டு பசைபோல் செய்து கொள்ளவும்.
 
சூடுபடுத்திய சப்பாத்தியை நீளவாக்கில் கட் செய்து பசையை தடவி முக்கோணமாக மடித்து கொண்டு, செய்து வைத்திருந்த வெங்காய கலவையை நிரப்பி பசையை தடவி மூடிவிடவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் தயாராக வைத்துள்ள சமோசாவை பொறித்து  எடுக்கவும். சுவையான ஆனியன் சமோசா தயார்.