செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Modified: வெள்ளி, 18 மே 2018 (17:15 IST)

மீண்டும் பரவும் எபோலா வைரஸ்: காங்கோவில் 23 பேர் பலி

காங்கோ நாட்டில் மீண்டும் பரவி வரும் எபோலா வைரஸ் நோயால் இதுவரை 23 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 
 
கடந்த 2013ம் ஆண்டு ஆப்பிரிக்க நாடான கினியாவில் தென்பட துவங்கிய எபோலா தொற்று நோய், மேற்கு ஆப்பிரிக்க நாடெங்கும் பரவியது. இந்த நோயின் அதிக்கம் 2016ம் ஆண்டு வரை தொடர்ந்து இருந்ததால், 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எபோலா நோயால் உயிரிழந்தனர். பின்னர் 2016ம் ஆண்டு பிறகு இந்நோய் கட்டுக்குள் வந்த நிலையில், தற்போது இந்த எபோலா வைரஸ் மீண்டும் பரவ தொடங்கியுள்ளது.
 
காங்கோ நாட்டின் வட மேற்கு நகரான பண்டகாவில் தான் எபோலா தொற்று பரவ தொடங்கியுள்ளது. இதுவரை இந்த நோய் தாக்கி 44 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 23 பேர் உயிரிழந்துள்ளனர்.
 
இந்த நோயை குணப்படுத்த உலக சுகாதார நிறுவனம் 4000 டோஸ் அளவிலான மருந்துகளை அந்நாட்டிற்கு அனுப்பியுள்ளது.