பாகிஸ்தானில் கன மழை: வெள்ளத்தில் சிக்கி 23 பேர் பலி!!


Sugapriya Prakash| Last Updated: வெள்ளி, 1 செப்டம்பர் 2017 (18:50 IST)
பாகிஸ்தானில் கடந்த மூன்று நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் நகரத்தின் பல பகுதிகள் வெள்ளக்காடாய் காட்சி அளிக்கிறது.

 
 
கடந்த புதன் கிழமை முதல் பெய்து வரும் கன மழையால் பாகிஸ்தானின் முக்கிய நகரமான கராச்சி வெள்ளம் சூழ்ந்துள்ளது. மழை வெள்ள விபத்துகளால் 7 குழந்தைகள் உட்பட 23 பேர் பலியாகியுள்ளனர் என தெரியவந்துள்ளது.
 
கிட்டதட்ட 400-க்கும் அதிகமான வீடுகள் வெள்ளத்தில் முழ்கியதால் மக்கள் தங்க இடமின்றி தவித்து வருகின்றனர். பலர் மின்சாரம் தாக்கி இறந்ததாக கூறப்படுகிறது. 
 
பாகிஸ்தான் ராணுவம் மற்றும் துணை ராணுவ படைகள் மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நீரை வெளியேற்றும் பணியில் சிலரும், படகுகள் மூலம் வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை சிலரும் மீட்டு வருகின்றனர்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :