Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சிறையில் பயங்கர கலவரம்: 900 கைதிகள் தப்பித்தனர்.


sivalingam| Last Modified திங்கள், 12 ஜூன் 2017 (06:10 IST)
மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று காங்கோ என்ற நாட்டில் உள்ள ஒரு சிறையில் தீவிரவாதிகள் திடீரென தாக்கியதால், இந்த பரபரப்பை பயன்படுத்தி 900 கைதிகள் தப்பிவிட்டதாகவும், அவர்களை பிடிக்க காங்கோ போலீசார் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.


 


காங்கோ நாட்டில் உள்ள பென்னி என்ற சிறையில் நேற்று நள்ளிரவு திடீரென தீவிரவாதக் குழுக்கள் திடீர் தாக்குதல் நடத்தின. அப்போது பயங்கர ஆயுதங்களை அவர்கள் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் சிறை அதிகாரிகள் உள்பட 11 பேர் பரிதாபமாக பலியாகினர்.

இந்த தாக்குதல் சம்பவத்தை பயன்படுத்திக் கொண்டு, சுமார் 900 கைதிகள் தப்பியோடிவிட்டதாகவும்,  தப்பியோடிய கைதிகளை பிடிக்க, தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் காங்கோ அரசு கூறியுள்ளது. மேலும் அந்த பகுதியில்  ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கு இதுவரை எந்த ஒரு தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை


இதில் மேலும் படிக்கவும் :