திங்கள், 27 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. தமிழ் மாதப் பலன்
Written By
Last Modified: வெள்ளி, 13 ஜூலை 2018 (14:25 IST)

கன்னி ராசிக்கான ஆடி மாத ராசி பலன்கள்

கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்)

கன்னி புத்தி என்பதற்கேற்ப எல்லாத் துறைகளிலும் ஆற்றல் பெற துடிக்கும் கன்னி ராசி அன்பர்களே



இந்த மாதம் நல்ல பொருளாதார வளமும் மேன்மையும் உண்டாகும். எடுத்த காரியம் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். நீண்ட நாட்களாக காத்திருந்தவர்களுக்கு நல்ல இனிப்பான செய்தி காத்திருக்கிறது. எந்த பிரச்சனையையும் முறியடிக்கும் வல்லமை உங்களுக்கு வந்து சேரும். மனதில் இருந்து வந்த இனம்புரியாத வேதனை அகலும்.குடும்பத்தில் வீடு, மனை விஷயத்தில் இருந்து வந்த சுணக்க நிலை மாறும். உறவினர்களுக்கு விருந்து, விழாக்களுக்காக செலவு செய்வீர்கள். புதிய சொத்துகள் வாங்கலாம். பிரிந்த குடும்பம் ஒன்று சேரும். மனைவி வழியே இருந்து வந்த கருத்து வேறுபாடு அடியோடு ஒழியும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். சந்தான பாக்கியம் கிட்டும்.

உத்தியோகஸ்தர்கள் உத்தியோகம் பார்ப்பவர்கள் உன்னதமான நிலையை அடையலாம். பிள்ளைகளால் பெருமை அடையலாம். பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை இருக்கும். வாகன ப்ராப்தி உண்டு. தேவையான ஆடம்பர பொருட்களை வாங்கும் போது கவனம் தேவை. மேலதிகாரிகளின் ஒத்துழைப்பு கிட்டும். சக ஊழியர்களின் ஆதடவு கிடைக்கும்.தொழிலதிபர்கள் தொழில் நிமித்தமாக வெளியூர் செல்ல நேரிடலாம். சிலர் தூர தேச பயணம் மேற்கொள்ள வேண்டி வரலாம். வியாபாரிகளுக்கு செய்து வரும் தொழிலில் சிறப்பான பலன்களைக் காணலாம். கடந்த காலத்தை விட கூடுதல் லாபம் கிடைத்தாலும் தொழிலை விரிவுபடுத்துவதற்குண்டான வேலைகளை இப்போது ஆரம்பிக்கலாம்.

பெண்கள் வீட்டிற்குத் தேவையான பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்கும். பிள்ளைகள் வழியில் சிற்சில கசப்பூட்டும் சம்பவங்கள் நடந்தாலும் சில அனுகூலம் ஏற்படும். உடல்நலத்தில் சீரான முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகம் பார்க்கும் பெண்களுக்கு இது சிறப்பான கால கட்டம். பதவி உயர்வும்,

அதனால் பொருளாதார உயர்வும் ஏற்படும். கலைஞர்கள் கலைஞர்களுக்கு தங்கு தடையின்றி புதிய வாய்ப்புகளைப் பெறலாம். புகழ் பாராட்டு வந்து சேரும். பலர் மதிக்கத்தக்க வகையில் அந்தஸ்து உயரும். வெளியூர் பயணங்களின் போது யாரிடமும் தேவையில்லாமல் அந்தரங்க விசயங்களைப் பற்றிக் கலந்துரையாட வேண்டாம். முற்போக்கான விஷயங்களில் மனம் செல்லும்.

அரசியல்வாதிகள் எதிர்பார்த்த பதவி உயர்வுகள் வந்து சேரும். நற்பெயர் எடுப்பதற்கான சூழ்நிலைகள் உருவாகும். எடுத்த காரியத்தில் வெற்றி கிடைத்தே தீரும். ஆனால் யாரிடமும் பழகும் போதும் கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகிறது. அரசு சார்ந்த விஷயங்களில் பிரத்தியேகமான சலுகைகளை பெற முடியாமல் போகலாம். 

மாணவர்கள் நல்ல நிலைக்கு உயர்த்தப் படுவீர்கள். மேல் படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும். மனதில் இருந்து வந்த பயம் போவதற்கு தகுந்த பெரியோர்களிடம் ஆலோசனையும், பயிற்சிகளையும் கேட்டு பெற்றுக் கொள்ளுங்கள்.
இது உங்கள் எதிர்காலத்திற்கு சிறந்த பயனையும், ஊக்கத்தையும் தரும்.

பரிகாரம்: வெள்ளிக்கிழமைகளில் அம்பாளுக்கு வெள்ளைநிற பூக்களைக் கொண்டு அர்ச்சனை செய்யவும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி, சனி