1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 29 டிசம்பர் 2018 (13:47 IST)

விஸ்வாசம் திருவிழா ஆரம்பம் : 200 அடியில் பேனர் - மாஸ் காட்டும் தல!

இயக்குநர் சிவா- அஜித் கூட்டணியில் உருவாகி வரும் படம் விஸ்வாசம். இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இவர்களுடன் தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகிபாபு உள்ளிட்ட பலரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
 

 




சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைக்கிறார். மதுரை மற்றும் தேனியை பின்னணியாகக் கொண்டு உருவாகி வரும் இந்தப் படம் பொங்கலுக்கு வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில் திருச்செந்தூர் அருகே அஜித்துக்கு 200 அடியில் பேனர் வைக்கும் பணி ஆரம்பமாகிவிட்டது.  இன்னும் ஓருசில நாட்களில் பிரமாண்டமாக பேனர்  தயாராகிவிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
 
 25 அடி உயரத்தில் 200 அடியில் பிரமாண்டமாக அஜித்தின் விஸ்வாசம் கட் அவுட் உருவாகி வருகிறது.