புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 27 டிசம்பர் 2018 (07:21 IST)

முதல்முறையாக ரஷ்யாவில் வெளியாகும் அஜித் படம்

கடந்த சில வருடங்களாக பெரிய ஸ்டார்களின் தமிழ்ப்படங்கள் உலகம் முழுவதும் வெளியாகி வரும் நிலையில் ரஷ்யாவிலும் ஒருசில தமிழ்ப்படங்கள் வெளியாகிறது. ரஜினியின் 'கபாலி' திரைப்படம் ரஷ்யாவில் முதல்முறையாக வெளியான தமிழ்ப்படம் என்ற பெருமையை பெற்ற நிலையில் அதன்பின் விஜய்யின் 'சர்கார்' மற்றும் ரஜினியின் '2.0' ஆகிய திரைப்படங்களும் ரஷ்யாவில் வெளியாகியது

இந்த நிலையில் தற்போது 'விஸ்வாசம்' திரைப்படமும் ரஷ்யாவில் 8 நகரங்களில் வெளியாகவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதுதான் ரஷ்யாவில் வெளியாகும் முதல் அஜித் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை ரஷ்யாவில் 8 நகரங்களில் வெளியிட ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாகவும் ரிலீசுக்கு முன் இன்னும் ஒருசில நகரங்களில் ஒப்பந்தம் செய்யப்படும் என்றும், ரஷ்யாவில் அதிக நகரங்களில் வெளியான தமிழ்ப்படம் என்ற பெருமையை 'விஸ்வாசம்' படம் பெறும் என்றும் இந்த படத்தை ரஷ்யாவில் வெளியிடும் உரிமையை பெற்றுள்ள பிரசாந்த் என்ற விநியோகிஸ்தர் கூறியுள்ளார்.