செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 13 நவம்பர் 2018 (16:22 IST)

விவாகரத்து பெற்ற ரஜினி: அதிர்ச்சியில் ரசிகர்கள்

நடிகர் விஷ்ணு விஷால் தனது மனைவியை விவாகரத்து செய்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதனால் அவரின் ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர். 
 
நடிகர் விஷ்ணு விஷால் 2011ம் ஆண்டு ரஜினி என்பவரை திருமணம் செய்து கொண்டார். நடிகர் நட்ராஜின் மகள் ரஜினி என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கு 2017ம் ஆண்டு ஆர்யன் என்ற மகன் பிறந்தான்.  
 
வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகி பிரபலமானவர் விஷ்ணு விஷால். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான "ராட்சசன்" படம் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து அவர் பல படங்களில் நடித்தும் வருகிறார். 
 
இந்நிலையில் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "நானும் ரஜினியும்( மனைவி ) கடந்த ஓராண்டாக பிரிந்து தான் வாழ்ந்து வருகிறோம். தற்போது நாங்கள் முறையாக விவாகரத்து பெற்றுக் கொண்டோம். எங்களுக்கு மகன் இருக்கிறான். அவனை சேர்ந்து வளர்ப்பதில் தான் நாங்கள் முழு கவனமும் செலுத்தி வருகிறோம். 
 
மேலும் நாங்கள் ஒரு நல்ல நண்பர்களாக ஒருவருக்கு ஒருவர் மதிப்பளித்து வாழ்வோம் . 
 
எங்கள் குழந்தை மற்றும் குடும்பத்திற்காக எங்களது இந்த தனிப்பட்ட வாழ்க்கையை மதிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்" என விஷ்ணு தெரிவித்துள்ளார். 
 
https://twitter.com/hashtag/vishnuvishal?lang=en