படத்தில் தான் வில்லன் நிஜத்தில் ஹீரோ - ராட்சசன்

Last Modified புதன், 31 அக்டோபர் 2018 (13:16 IST)
முண்டாசுப்பட்டி திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் ராம்குமார் இயக்கியிருந்தத் திரைப்படம் 'ராட்சசன்'. சமீபத்தில் இந்தப் படம் வெளியாகி, ரசிகர்களிடம் அமோக வரவேற்பைப் பெற்று வருகிறது. சைக்கோ திரில்லராக முற்றிலும் மாறுபட்ட களத்தில் உருவாகியிருந்த ராட்சசனை ரசிகர்கள் வெகுவாக ரசித்தனர். 
 
இதில் போலீஸ் கதாபாத்திரத்தில் அற்புதமாக நடித்திருந்தார் நடிகர் விஷ்ணு. இவருடன் ராமதாஸ், அமலாபால் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து படத்திற்கு மிகப்பெரும் பலத்தை சேர்த்தனர். 
 
கிறிஸ்டோபர் என்ற வில்லன் கதாபாத்திரத்தில் சரவணன் என்பவர் மிரட்டியிருந்தார். தற்போது அவரின் மிரட்டலான நடிப்பிற்கு பல ரசிகர்கள் உள்ளனர். மேலும் அந்த வில்லனின் உண்மையான முகத்தைப் பார்க்க வேண்டும் என ரசிகர்கள் ஆவலுடன் இருந்தனர். ஆனால், அவரின் முகத்தை வெளியில் காட்டாமல், ரகசியம் காத்து  வந்த  ராட்சசன் படக்குழு, நேற்று கிறிஸ்டோபரின் முகத்தை மீடியாவுக்கும், ரசிகர்களுக்கும் காண்பிக்கப்பட்டது. 
 
முதலில் அவரின் முகபாவனத்தை பார்த்து பலர் அவர் ஒரு வெளிநாட்டவராக இருக்கக்கூடும் என்று சந்தேகித்தனர்.ஆனால் சரவணன் என்ற பெயரை வைத்துள்ளதால்,அவர் நிச்சயம் தமிழகத்தைச் சேர்ந்தவராகத்தான் இருப்பார் என யூகித்து வருகின்றனர் . 
 
இந்நிலையில் ராட்சசன் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட சரவணன் அவ்வளவு அமைதியாகவும் பவ்யமாகவும் காணப்பட்டார் . இவர் தன் முகத்தை முதன்முறையாக மீடியாவுக்கு வெளிக்காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது. 


இதில் மேலும் படிக்கவும் :