ராட்சசன் வெற்றி படத்தை கைப்பற்றியது முன்னனி தமிழ் சேனல்!

Last Updated: வெள்ளி, 26 அக்டோபர் 2018 (19:18 IST)
பள்ளி மாணவிகளைக் கடத்தி  கொடூரமாகக் கொலை செய்யும் சீரியல் கில்லர்,  அவனை வேட்டையாடிப் பிடிக்க முயலும் போலீஸ் அதிகாரி. இருவருக்குள்ளும் நிகழும் த்ரில் ஆட்டத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படம் ‘ராட்சசன்!’
 
முண்டாசுப்பட்டி திரைப்படத்தை இயக்கிய ராம்குமார் இயக்கத்தில் வெளிவந்த  இத்திரைப்படம்  சைக்கோ த்ரில்லராக முற்றிலும் மாறுபட்ட ஒரு களத்தில் ராட்சசனை இயக்கியிருந்தார். இந்தத் திரைப்படம் ரசிகர்களுக்கு ஒரு சிறப்பான அனுபவத்தைக் கொடுத்து அமோக வரவேற்பையும் பெற்றுள்ளது . 
 
இதில் போலீஸ் கதாபாத்திரத்தில் விஷ்ணு, ராமதாஸ், அமலாபால் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள். கிரிஸ்டோபர் என்ற வில்லன் கதாபாத்திரத்தில் சரவணன் என்பவர் மிரட்டியிருந்தார். இதன் த்ரில்லர் அனுபவமும், விறு விறு திரைக்கதை அமைப்பும் வெகுவாக ரசிகர்களை ஈர்த்து வருகிறது. 
 
அதோடு, ராட்சசனை பார்த்த பிரமாண்ட இயக்குனர் சங்கர், சூப்பர் ஸ்டார் ரஜினி, எம்.எஸ் தோனி படத்தின் இயக்குனர் உள்ளிட்ட  பல பிரபலங்கள் அவர்களின் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்தனர்.
 
இந்நிலையில் தற்போது இந்தத் திரைப்படத்தின் சேட்டிலைட் உரிமையை முன்னணி தொலைக்காட்சியான, சன் டி.வி வாங்கியிருக்கிறதாம். 


இதில் மேலும் படிக்கவும் :