நடிகர் சங்கத்தை விட்டு விஷாலை விரட்டுவேன்: ஜேகே ரித்தீஷ்

Last Modified வெள்ளி, 9 பிப்ரவரி 2018 (15:24 IST)
விஷாலை நடிகர் சங்கத்தை விட்டு விரட்டுவேன் என ஜேகே ரித்தீஷ் ஆவேசமாக கூறியுள்ளார்.
நாயகன் படத்தில் ஹிரோவாக அறிமுகமானவர் ரித்தீஷ், இவர் கடந்த ஆண்டு நடந்த நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் அணிக்கு ஆதரவாக செயல்பட்டார்.  பின்பு விஷாலுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரை கடுமையாக எதிர்க்கும் நபராகவிட்டார்.
 
இந்நிலையில் இந்த ஆண்டு மே மாதம் நடக்கவிருக்கும் நடிகர் சங்கத் தேர்தலில் விஷாலுக்கு எதிராக போட்டியிட போவதாக அறிவித்துள்ளார். சமீபத்தில் நடந்த சிவா மனசுல புஷ்பா டீஸர் வெளியிட்டு விழாவில் ஜேகே ரித்தீஷ் பேசியதாவது, நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிட்டு, விஷாலை நடிகர் சங்கத்தை விட்டு  விரட்டுவேன் என கூறினார். இதே விழாவில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி விஷாலை தமிழ்நாட்டை விட்டு விரட்டுவேன் என கூறியது குறிப்பிடத்தக்கது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :