நெருங்கிவிட்டது நடிகர் சங்க தேர்தல்: மீண்டும் வெற்றி பெறுமா பாண்டவர் அணி

Last Updated: சனி, 3 பிப்ரவரி 2018 (21:46 IST)
கடந்த 2015ஆம் ஆண்டு நடந்த நடிகர் சங்க தேர்தலில் விஷாலின் பாண்டவர் அணி, சரத்குமார்-ராதாரவி அணியை தோல்வி அடைய செய்து வெற்றி வாகை சூடியது. நாசர் தலைமையிலான இந்த அணி தற்போது சென்னை தியாகராயநகர் அபிபுல்லா சாலையில் உள்ள 19 கிரவுண்ட் நிலத்தில் நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில் மூன்று வருட நடிகர் சங்கத்தின் பதவி வரும் மே மாதத்துடன் முடிவுக்கு வருவதால் ஏப்ரல் மாதம் தேர்தல் தேதி அறிவிக்கப்படவுள்ளது. இதனால் கடந்தமுறை போல் ஏமாறாமல் இந்த முறை நடிகர் சங்கத்தை கைப்பற்றியே ஆகவேண்டும் என்று சரத்குமார் அணி முடிவு செய்துள்ளது.

இருப்பினும்
சரத்குமார், ராதாரவி, வாகை சந்திரசேகர் ஆகியோர் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளதால் அவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது என்று விஷால் தரப்ப்பினர் கூறி வருகின்றனர். எனவே இதுகுறித்து சட்டநிபுணர்களுடன் ஆராய்ந்து நீக்கத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது குறித்து சரத்குமார், ராதாரவி ஆலோசனை செய்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :