Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

நடிகர் விஷால் புதிய கட்சி தொடங்குவது குறித்து ஆலோசனை

vishal
Last Updated: ஞாயிறு, 4 பிப்ரவரி 2018 (13:28 IST)
உள்ளாட்சி தேர்தலுக்கு பின் கட்சி தொடங்குவது பற்றி  ஆலோசனை மேற்கொள்ளப்படும் என நடிகர் விஷால் கூறியுள்ளார்.
கடந்த 2015ம் ஆண்டு, நடிகர் சங்கத்தில் முக்கிய பொறுப்பில் இருந்த சரத்குமார் மற்றும் ராதாரவி அணிக்கு எதிராக களம் இறங்கிய விஷால், கார்த்திக், நாசர் உள்ளிட்ட அணி தேர்தலை நடத்தி அதில் வெற்றி பெற்றனர். வரும் மே மாதம் மீண்டும் நடிகர் சங்க தேர்தல் நடைபெற உள்ளது.
 
இந்நிலையில் நடிகர் விஷால் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கட்சி தொடங்குவது பற்றி உள்ளாட்சி தேர்தலுக்கு பின் ஆலோசனை மேற்கொள்ளப்படும் என கூறினார். மேலும் தமிழக அரசு பேருந்து கட்டண உயர்வை முழுமையாக திரும்ப பெற மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறினார்.


இதில் மேலும் படிக்கவும் :