விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகும் சண்டைக்கோழி-2

s
Last Updated: செவ்வாய், 15 மே 2018 (18:15 IST)
நடிகர் விஷால் படத்தை விநாயகர் சதுர்த்து தினத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
 
விஷால், மீரா ஜாஸ்மின் இயக்கத்தில் 2005ஆம் ஆண்டு வெளியான படம் ‘சண்டக்கோழி’. 12 வருடங்கள் கழித்து இதன் இரண்டாம் பாகத்தை இயக்கவிருக்கிறார் லிங்குசாமி. விஷால் ஹீரோவாக நடிக்க, கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடிக்கிறார்.
 
இந்தப் படத்தில், விஷாலுக்கு வில்லியாக முக்கிய கேரக்டரில் நடிக்கிறார் வரலட்சுமி. விஷாலின் 25-வது படமாக உருவாகி வரும் இந்த படத்தின் டீசர் சமீபத்தில் இணையதளத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
s
 
இந்நிலையில், நடிகர் விஷால் இப்படத்தை விநாயகர் சதுர்த்து தினத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும், இதற்காக தயாரிப்பாளர் சங்கத்தில் அனுமதி கேட்க இருப்பதாகவும் தெரிவித்தார்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :