Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

தேர்தலை மனதில் வைத்தே பட்ஜெட்: பாஜகவை அம்பலப்படுத்திய மூங்கில் கொள்கை!

Last Modified வியாழன், 1 பிப்ரவரி 2018 (17:19 IST)
வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா, திரிபுரா மற்றும் நாகாலாந்து ஆகியவற்றில் சட்டசபை தேர்தல் வர உள்ளதால் அந்த மாநில மக்களின் வாக்குகளை மனதில் வைத்து பட்ஜெட்டில் அவர்களுக்கான திட்டங்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
 
இந்த மாநிலங்களில் ஆட்சியை கைப்பற்ற தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. கடந்த டிசம்பர் மாதம் இந்த மாநில மக்களின் கோரிக்கையை ஏற்று மரம் வகைகளில் இருந்து மூங்கிலுக்கு விலக்கு அளித்தது.
 
இதனால் வனத்துறையின் அனுமதியில்லாமல் மூங்கிலை வெட்டி விற்பனை செய்யும் நிலை உருவானது. இந்நிலையில் இந்த மக்களை மேலும் கவரும் விதமாக மூங்கில் மேம்பாட்டு திட்டத்திற்காக ரூ.1290 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது.
 
இதுவரை எந்த பட்ஜெட்டிலும் மூங்கில் கொளைகை திட்டங்கள் இடம்பெற்றதில்லை. தற்போது அந்த மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நெருங்கியுள்ளதால் அந்த மாநில மக்களின் வாக்குகளை குறிவைத்து தற்போது பட்ஜெட்டில் அவர்களுக்கான திட்டத்தை வெளியிட்டுள்ளதாக பேசப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :