எச்.ராஜாவுக்கு சல்யூட் செய்ய தயார்! விஷால்

Last Modified திங்கள், 29 ஜனவரி 2018 (22:15 IST)
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக போராட்டம் வலுத்து வருகின்றது. இன்று முதல் பேருந்து கட்டணங்கள் சிறிய அளவில் குறைக்கப்பட்டிருந்தாலும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சாலைமறியல் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் பேருந்து கட்டணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா போராட்டம் நடத்தினால், அவருக்கு சல்யூட் செய்ய தயார் என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சிகள் பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக போராடுவது அவர்களுக்கு ஏற்பட்ட அதிருப்தியால்தான் என்றும் அதே அதிருப்தியுடன் எச்.ராஜாவும் போராட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்

பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக போராட்டம் செய்து விஷாலிடம் அவர் சல்யூட் பெறுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

webdunia

இதில் மேலும் படிக்கவும் :