தோனிக்கு ரசிகர் மன்றம் திறந்த விக்ரம்பிரபு


cauveri manickam| Last Modified சனி, 7 அக்டோபர் 2017 (13:41 IST)
தோனியின் ரசிகரான விக்ரம்பிரபு, அவருக்கு ரசிகர் மன்றம் திறந்துள்ளார்.


 

 
‘நெருப்புடா’ படத்தைத் தொடர்ந்து விக்ரம்பிரபு நடித்திருக்கும் படம் ‘பக்கா’. எஸ்.எஸ்.சூர்யா இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். ‘நெருப்புடா’ படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்திலும் விக்ரம்பிரபு ஜோடியாக நடித்துள்ளார் நிக்கி கல்ரானி. இன்னொரு ஹீரோயினாக ‘பிக் பாஸ்’ புகழ் பிந்து மாதவி நடித்துள்ளார்.

விக்ரம்பிரபு, இந்தப் படத்தில் கிரிக்கெட் வீரர் தோனியின் தீவிர ரசிகராக நடித்திருக்கிறாராம். அதனால், தன்னுடைய பெயரையே ‘தோனி குமார்’ என்று மாற்றிக் கொள்ளும் விக்ரம்பிரபு, தோனி ரசிகர் மன்றம் திறந்து, அதன் தலைவராக இருக்கிறாராம். கிராமத்துக் கதையான இதில், திருவிழா காலங்களில் பொம்மை விற்பவராக நடித்துள்ளார் விக்ரம்பிரபு.

ரஜினி ரசிகையாக நடித்துள்ள நிக்கி கல்ரானி, தன்னுடைய பெயரை ‘ரஜினி ராதா’ என்று மாற்றி வைத்துள்ளாராம். ரஜினி ரசிகர் மன்றத்தை நடத்திவரும் நிக்கி, ரஜினி நடித்த பல்வேறு தோற்றங்களில் படத்தில் தோன்றுவாராம். கிராமத்து பண்ணையார் மகளாக பிந்து மாதவி நடித்துள்ளார். இவர்கள் மூன்று பேருக்கும் இடையில் நடக்கும் கிராமத்துக் காவியம்தான் இந்தப் படம் என்கிறார்கள்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :