விரைவில் 'மெர்சலின்' பக்கா மாஸ் மாடல்: புதிய தகவல்


sivalingam| Last Modified திங்கள், 7 ஆகஸ்ட் 2017 (22:15 IST)
இளையதளபதி விஜய் நடித்து வரும் 'மெர்சல்' படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்திற்கு வந்துவிட்டதால், இந்த படத்தின் புரமோஷன் பணிகளை தயாரிப்பு நிறுவனமான தேனாண்டாள் ஸ்டுடியோ லிமிடேட் நிறுவனம் விரைவில் தொடங்கவுள்ளது.


 
 
முதல்கட்டமாக 'மெர்சல்' படத்தின் சிங்கிள் பாடல் வெளியாகவுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மானின் அசத்தலான கம்போஸிங்கில் உருவாகியிருக்கும் இந்த பாடல் 'பக்கா மாஸ்' பாடல் என்றும் இந்த பாடலின் ரிலீஸ் தேதி வெகுவிரைவில் அறிவிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் தேனாண்டாள் ஸ்டுடியோ லிமிடேட் நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்திலும் பதிவு செய்யப்பட்டுள்ளது
 
'விவேகம்' படத்தின் பாடல்கள் இன்று வெளியாகியுள்ளதால் அஜித் ரசிகர்கள் உற்சாகமாகியிருக்கும் நிலையில் இந்த உற்சாகத்திற்கும் எந்த வகையிலும் குறைவில்லாத அளவில் 'பக்கா மாஸ்' பாடல் அறிவிப்பால் விஜய் ரசிகர்களும் உற்சாகத்தில் மூழ்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :