இதான்யா கணக்கு… தளபதி நடிகரின் பக்கா ப்ளான்!!


Cauveri Manickam (Suga)| Last Modified வியாழன், 21 செப்டம்பர் 2017 (21:34 IST)
தளபதி நடிகரின் படத்தைத் தயாரிப்பாளரே ரிலீஸ் செய்வதற்கு காரணமாகத் தளபதியைக் கைகாட்டுகிறார்கள்.

 
 
தளபதி நடிகர் மூன்று வேடங்களில் நடித்துள்ள படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது. 135 கோடி ரூபாயில் மிகப் பிரமாண்டமாகத் தயாராகியுள்ள இந்தப் படத்தை இன்னொருவர் வாங்கி ரிலீஸ் செய்வதென்றால், குறைந்தபட்சம் 150 கோடி ரூபாய் விலை சொல்லும் தயாரிப்பு நிறுவனம்.
 
அவ்வளவு தொகை கொடுத்து வாங்க யாரும் முன்வர மாட்டார்கள் என்பது ஒருபுறமிருக்க, ஒருவேளை நஷ்டப்பட்டால் தன்னைத் தேடி விநியோகஸ்தர்கள் வந்துவிடுவார்கள் எனப் பயப்படுகிறாராம் தளபதி நடிகர். 
 
எனவேதான், தயாரிப்பாளரையே நேரடியாக ரிலீஸ் செய்ய சொல்லிவிட்டார். நாளைக்கு என்ன ஆனாலும் தயாரிப்பாளர் தான் பொறுப்பாக முடியும் என்பதுதான் தளபதி நடிகரின் ப்ளானாம்.


இதில் மேலும் படிக்கவும் :