மகன் துருவ்வை இயக்குகிறாரா விக்ரம்?

Cauveri Manickam (Sasi)| Last Modified புதன், 4 அக்டோபர் 2017 (12:05 IST)
விக்ரம், தன்னுடைய மகன் நடிக்கும் படத்தை இயக்குவதாகத் தகவல் கிடைத்துள்ளது.

 
 
விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே நடிப்பில் வெளியான தெலுங்குப் படம் ‘அர்ஜுன் ரெட்டி’. பிளாக் பஸ்டர் ஹிட்டான இந்தப் படத்தை பல மொழிகளிலும் ரீமேக் செய்ய ஆர்வமாக இருக்கின்றனர். தமிழிலும் இந்தப் படம் ரீமேக் செய்யப்பட இருக்கிறது. நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம், இந்தப் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாக இருக்கிறார்.
 
இந்தப் படத்தை யார் இயக்குவது என்று அறிவிக்கப்படாத நிலையில், விக்ரமே தன் மகனை இயக்கப் போவதாகத் தகவல் கிடைத்துள்ளது. விக்ரமை வைத்து ’10 எண்றதுக்குள்ள’ படத்தை இயக்கிய விஜய் மில்டன், இந்தத் தகவலை  வெளியிட்டுள்ளார். ‘சேது’வை விட துருவ் விக்ரமிற்கு இந்தப் படம் பெரிதாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார் விஜய்  மில்டன்.


இதில் மேலும் படிக்கவும் :