ஸ்பைடர் படத்தின் முதல்நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

Sasikala| Last Modified வியாழன், 28 செப்டம்பர் 2017 (10:57 IST)
இயக்குநர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் மகேஷ்பாபு நடிப்பில் உருவாகியுள்ள ஸ்பைடர் நேற்று வெளியாகியுள்ளது. இப்படத்தினை பார்த்த பலரும் ஸ்பைடர் படத்தை பற்றிய விமர்சனங்களை தங்கள் டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளனர்.

 
 
அதில் ஏராளமானோர், படம் நன்றாக இருக்கிறது. தான் ஒரு பெரிய இயக்குனர் என்பதை முருகதாஸ் மீண்டும் நிரூபித்துள்ளார்.  படத்தின் கதை மற்றும் திரைக்கதை அருமையாக இருக்கிறது. மகேஷ்பாபு மற்றும் வில்லனாக நடித்துள்ள எஸ்.ஜே.சூர்யா ஆகியோரின் நடிப்பை பாராட்டி வருகின்றனர். 
 
இப்படம் அழுத்தமான ஒரு சமூக விஷயத்தை முன்வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. தெலுங்கு சினிமாவை தாண்டி தமிழ்  சினிமா ரசிகர்களும் மகேஷ் பாபுவின் முதல் நேரடி தமிழ் படத்தை வரவேற்றுள்ளனர். தற்போது சென்னையில் இப்படம் தமிழ், தெலுங்கு இரண்டு மொழியையும் சேர்ந்து ரூ. 64 லட்சம் வசூலித்துள்ளதாம்.
 
தமிழ் - ரூ. 46 லட்சம், தெலுங்கு - ரூ. 18 லட்சம், மொத்தம் ரூ. 64 லட்சம் வசூல் என்றும் கூறப்படுகிறது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :