வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 14 செப்டம்பர் 2020 (18:08 IST)

விஜய் சேதுபதி & டாப்ஸி நடிக்கும் படத்தின் பெயர் இதுதான்… வெளியான ரகசியம்!

விஜய் சேதுபதி மற்றும் டாப்ஸி நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு என்னவென்பது வெளியாகியுள்ளது.

கொரோனா காரணமாக முடங்கி இருந்த தமிழ் சினிமா உலகம் அரசு அனுமதி அளித்ததை அடுத்து இப்போது லேசாக சுறுசுறுப்பு அடைய ஆரம்பித்துள்ளது. சில நாட்களாக சென்னை உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்புகள் நடந்து கொண்டு இருந்த நிலையில் இப்போது ஜெய்ப்பூருக்கு கிளம்பியுள்ளார் விஜய் சேதுபதி.

இதன் மூலம் கொரோனாவுக்கு பின் படப்பிடிப்பில் முதலில் கலந்துகொள்ளும் கதாநாயகன் என்ற பெருமையை பெறுகிறார் விஜய் சேதுபதி. டாப்ஸி நடிக்கும் இந்த படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி குடும்பத்தோடு ஜெய்ப்பூர் சென்றுள்ளார்.

இந்நிலையில் இப்போது இந்த படத்தின் பெயர் என்னவென்பது தெரியவந்துள்ளது. இந்த படத்துக்கு அனபெல் சுப்ரமண்யம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.