வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 14 செப்டம்பர் 2020 (15:49 IST)

இன்று நாடாளுமன்றம் வந்த 17 எம்பிக்களுக்கு கொரோனா: பெரும் பரபரப்பு

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று காலை 9 மணிக்கு தொடங்கிய நிலையில் திமுக எம்பிக்கள் உள்பட பல எதிர்க்கட்சி எம்பிக்கள் ஆவேசமாக நீட் தேர்வுக்கு எதிரான தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்தனர். இதனால் நாடாளுமன்றத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது 
 
இந்த நிலையில் நாடாளுமன்றத்தின் இன்றைய கூட்டத்தொடர் மதியம் ஒரு மணிக்கு முடிந்தது. இந்த நிலையில் இன்று நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் கலந்து கொண்ட 17 எம்பிக்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
பாஜகவை சேர்ந்த 12 எம்பிக்கள், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இரண்டு எம்பிக்கள், சிவசேனா, திமுக, ஆர்எல்பி கட்சிகளைச் சேர்ந்த தலா மற்றும் மீனாட்சி லேகி, அனந்தகுமார் ஹெக்டே உள்ளிட்ட 17 நாடாளுமன்ற எம்பிக்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இதனை அடுத்து இவர்களால் மற்றும் எம்பிக்களுக்கு கொரோனா தொற்று பரவியதா என்பது குறித்து மத்திய சுகாதாரத் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்