Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

விஜய் மற்றும் தனுஷ் படத்தின் தொலைக்காட்சி உரிமையை வாங்கிய சன் டிவி

Sasikala| Last Modified செவ்வாய், 12 செப்டம்பர் 2017 (18:00 IST)
அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, எமி ஜாக்சன் மற்றும் பலர் நடித்து கடந்த வருடம் வெளிவந்த படம் ‘தெறி’ படத்தையும்,  சமீபத்தில் வெளியான ஆகிய இரு படங்களின் தொலைக்காட்சி உரிமையை பெற்றுள்ளது சன் டிவி.

 
இப்படத்தின் சாட்டிலைட் தொலைக்காட்சி உரிமை கடந்த ஒன்றரை வருடங்களுக்கும் மேலாக விற்கப்படாமலே இருந்தது.
தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு நல்ல விலை வரும் போதுதான் படத்தை விற்கும் முடிவில் இருந்தார் என்று  சொல்லப்பட்டது.

 
இப்போது படத்தை ஒளிபரப்பும் உரிமையை சன் டிவி வாங்கியுள்ளது. இது பற்றிய அறிவிப்பை சன் டிவி அதன் டிவிட்டர்  மூலம் தெரிவித்துள்ளது.
 
‘தெறி’ படத்துடன் கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ், கஜோல், அமலா பால்  மற்றும் பலர் நடித்து கடந்த மாதம் வெளிவந்த ‘வேலையில்லா பட்டதாரி 2’ படத்தையும் வாங்கியுள்ளதாக அறிவித்துள்ளார்கள். ‘தெறி’ படம் அனேகமாக வரும் தீபாவளிக்கு ஒளிபரப்பாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :