வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 7 பிப்ரவரி 2019 (17:31 IST)

நயன்தாராவை கிண்டலடித்த விக்னேஷ்சிவன்..!

ஐரா படத்தில் நயன்தாரா நடித்துள்ளதை பார்த்து விக்னேஷ்சிவன் கிண்டலடித்துள்ளார். 


 
தமிழ் சினிமாவின் ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்றழைக்கபடும் நயன்தாரா, கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அதில் பெரும்பாலும் வெற்றியும் அடைகிறார். அப்படி வெளியான படத்தில் "அறம்" மாபெரும் வெற்றிபெற்றது. 
 
அந்தவகையில் தற்போது சர்ஜுன் இயக்கத்தில் ஐரா படத்தில் திகில் கதையில் தான் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான  இந்த படத்தின் ட்ரைலர் , ப்ர்ஸ்ட் லுக் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 
 
அண்மையில் இந்த படத்தில் இருந்து மேகதூதம் என்ற பாடல் வெளியாகி இருந்தது. பாடலாசிரியர் தாமரையின் வரிகளில் உருவான இப்பாடல் பாடகி பத்மபிரியா ராகவன் பாட ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது.
 
இந்நிலையில் தற்போது , இந்த பாடலை பாராட்டிய நயன்தாராவின் காதலரும் இயக்குனருமான  விக்னேஷ் சிவன், அருமையான பாடல் . தாமரை மேடம் ஒவ்வொரு பாடல் வாயிலாகவும் நம்மை ஆச்சர்யப்பட வைக்கிறார். இப்படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளருக்கு வாழ்த்துக்கள்.  
 
ஐரா படத்தில் நயன்தாரா போலவே உள்ள பெண்ணை நடிக்க வைத்துள்ளது மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது. என்று நயன்தாராவை கிண்டலடித்துள்ளார் விக்னேஷ் சிவன்.