ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 31 ஜனவரி 2019 (22:22 IST)

சிவகார்த்திகேயனனின் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு தேதி இதுதான்

நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இரண்டாவது முறையாக இணைந்து நடித்த படத்தின் டைட்டில் குறித்த தகவல் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் வெளியானது. இந்த படத்திற்கு மிஸ்டர் லோக்கல்' என டைட்டில் வைத்திருப்பதாக செய்திகள் கசிந்த நிலையில் தற்போது இந்த படத்தின் அதிகாரபூர்வ டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை வரும் பிப்ரவரி 2ஆம் தேதி வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.
 
இந்த தகவலை இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோக்ரீன் நிறுவனம் தனது டுவிட்டரில் உறுதி செய்துள்ளது. இத்தனை நாள் பொறுமையாக இருந்ததற்கு ரசிகர்களுக்கு நன்றி என்றும் பிப்ரவரி 2ஆம் தேதி டைட்டிலை வெளியிடவுள்ளதாகவும், மேலும் இந்த மாதத்திலேயே இந்த படம் குறித்த இன்னும் சில ஆச்சரியமான தகவல்களையும் வெளியிடவுள்ளதாகவும் ஸ்டுடியோக்ரீன் அறிவித்துள்ளது. அறிவித்துள்ளது.
 
எம்.ராஜேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, ராதிகா உள்பட பலர் நடித்துள்ளனர். ஹிப்ஹாப் தமிழா ஆதி இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தின் பாடல்கள் பிப்ரவரி இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.